சேலம் மாநகர மேற்கு சரக காவல்துறையினருக்கு மன அழுத்தம் இன்றி பணியாற்ற யோகா பயிற்சி!

0 2157

சேலம் மாநகர காவல்துறையினர் சுறுசுறுப்பாக செயல்படவும், மன அழுத்தம் ஏதுமின்றி பணியாற்றவும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா உத்தரவின் பேரில் சேலம் சூரமங்கலம் புதுரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை யோகா பயிற்சி வழங்கப்பட்டது. சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட சேலம் மாநகர மேற்கு சரக காவல்துறையினர் பங்கேற்றனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக யோகா ஆசிரியர் ஆனந்தமுருகன், கைத்தட்டல் பயிற்சி, சிரிப்பு பயிற்சி உள்ளிட்டவை பல்வேறு பயிற்சிகளை அளித்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments