ஜப்பானில் மின் உற்பத்திக்காக நிலக்கரி பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு, பிகாச்சு கதாப்பாத்திரம் போல் வேடமணிந்து போராட்டம்

0 1910

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடைபெறும் நிலையில், க்ளைட் நதிக்கரை அருகே பிரபலமான போக்கிமான் கார்ட்டூன் தொடரில் இடம்பெறும் பிகாச்சு கதாப்பாத்திரம் போல் வேடமணிந்த நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜப்பானில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் நடனமாடியபடி போராட்டம் நடத்தினர்.

கடந்த 2011-ஆம் ஆண்டில் சுனாமி தாக்கியதில் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையம் விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து அந்நாட்டில் பெரிய அளவில் நிலக்கரி அடிப்படையாக கொண்ட 7 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

நிலக்கரியால் பருவ நிலை பாதிப்பதாக குற்றஞ்சாட்டி, அதனை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments