ஏற்காட்டுக்குச் செல்லும் குப்பனூர் மலைப்பாதையில் நிலச்சரிவு.! 2 நாள் போக்குவரத்து நிறுத்தம்

0 2111

சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்குச் செல்லும் குப்பனூர் மலைப்பாதையில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் இன்றும் நாளையும் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சேர்வராயன் மலைப்பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்ததால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் குப்பனூரில் மலைப் பாதையில் கற்களும் பாறைகளும் உருண்டு விழுந்தன. மண்ணரிப்பு ஏற்பட்டதுடன் மரங்களும் சாய்ந்து கிடப்பதால் அந்தப் பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

குப்பனூரில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பார்வையிட்டுக் கற்களையும் பாறைகளையும் அகற்றும் பணிகளை விரைவுபடுத்தினார். சாலையைச் சீரமைக்க இரு நாட்கள் ஆகும் என்பதால் இன்றும், நாளையும் குப்பனூர் வழியே வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments