சென்னை மாநகரில் குவிந்த பட்டாசு கழிவுகள்... தற்போது வரை 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

0 2601

சென்னையில் அதிகாலையிலிருந்து தற்போது வரை 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளியன்று உருவாகும் பட்டாசு குப்பைகளை 24 மணி நேரத்திற்குள் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுருந்தார்.

இதையடுத்து அதிகாலை முதலே வழக்கத்தைவிட 33 தூய்மைப்பணி வாகனங்கள் கூடுதலாக இயக்கப்பட்டு தற்போது வரை 48 டன் பட்டாசு கழிவுகள் சென்னை வீதிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

இன்றும், நாளையும் இப்பணி தொடரும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில், அகற்றப்பட்ட பட்டாசு கழிவுகள் அனைத்தும் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள அபாயகரமான கழிவுகள் மேலாண்மை மையத்தில் பாதுகாப்பான முறையில் அகற்றப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments