10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 11182

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6 மற்றும் 7ல் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வரும் 8, 9 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு சிலப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் வரும் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த வானிலை மையம், பலத்த காற்று காரணமாக வரும் 6ஆம் தேதி வரை வங்கக் கடல் பகுதிக்கும், வரும் 7ஆம் தேதி வரை அரபிக்கடலுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments