மதுரையில் தீபாவளியன்று பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறு - எதிர் தரப்பினரை அரிவாளால் வெட்டி கொலை செய்த போதை ஆசாமி!

0 7018

மதுரை சோழவந்தானில் தீபாவளியன்று பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சோழவந்தான் சப்பானி கோவில்தெரு பகுதியை சேர்ந்த ஜாங்கிர் என்பவர் மதுபோதையில் பட்டாசு வெடித்த நிலையில், ஒரு பட்டாசு அதே பகுதியை சேர்ந்த கருப்புராஜாவின் மகள் மீது பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கருப்பு ராஜா ஜாங்கிரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஜாங்கிர், வீட்டிற்கு சென்று அரிவாள் எடுத்து வந்து   தெருவில் நடந்துசென்ற கருப்புராஜாவை பின் கழுத்து மற்றும் முதுகில் வெட்டினார். இதில் படுகாயமடைந்த கருப்பு ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments