கான்பூரில் விமானப்படை அதிகாரிக்கு ஜிகா வைரஸ் பாதித்த நிலையில், 30 பேருக்கு அடுத்தடுத்து பரவியது ஜிகா

0 2146

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் மேலும் 30 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது.

கான்பூரில் பணியாற்றி வந்த இந்திய விமானப் படை அதிகாரி ஒருவருக்கு கடந்த அக்டோபரில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனை அடுத்து, தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 9 பேருக்கு அடுத்தடுத்து ஜிகா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் சிலர் விமானப்படை நிலையம் இருந்த பகுதியைச் சுற்றி இருப்பவர்கள் என மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கான்பூரில் புதிதாக 30 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments