தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அடுத்த சில நாட்களில் தீவிரமடையும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

0 13113

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அடுத்த சில நாட்களில் தீவிரமடையும் என்றும், இதனால் அடுத்த இரு வாரங்களில் தென் மாவட்டங்கள், உட்புற மாவட்டங்களில் இயல்பை விடக் கூடுதலாக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தில் முதலிரு நாட்கள் மழைப்பொழிவு இயல்பாக இருக்கும் என்றும், அதன் பிறகு பருவமழை தீவிமடைந்து தமிழ்நாட்டின் வட கடலோரப் பகுதிகள், வெளிப்புறப் பகுதிகள், உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

தென்தீபகற்பப் பகுதியில் கடந்த வாரத்தில் இயல்பைவிட 42 விழுக்காடு கூடுதலாக மழை பெய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments