தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை

0 3153

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில்  431 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 3-ஆம் தேதி தமிழகத்தில் மொத்தம், 205 கோடியே 61 லட்ச ரூபாய்க்கும், தீபாவளியன்று 225 கோடியே 42 லட்ச ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த இரு நாட்களில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் சுமார் 99 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 89 கோடியே 95 லட்ச ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 79 கோடியே 81 லட்ச ரூபாய்க்கும் மது விற்பனையாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களில் 467 கோடி ரூபாய்க்கு மது விற்பனையான நிலையில், இந்தாண்டு அதை விட 36 கோடி ரூபாய் குறைவாக மதுவிற்பனையாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments