அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 758 வழக்குகள் பதிவு

0 2098

தமிழ்நாடு அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக சென்னையில் இதுவரை 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் இரவு 7.00 மணி முதல் 08.00 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட சென்னை காவல்துறையினர், நேற்று மட்டும் 668 வழக்குகளை பதிவு செய்தனர். மேலும், தமிழக அரசின் வழிகாட்டுதல் விதிகளை மீறி பட்டாசுக் கடைகள் நடத்தியது தொடர்பாக இதுவரை 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தீபாவளியன்று சென்னையில் பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்ட 20க்கும் மேற்பட்டோர் ராயப்பேட்டை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்ற நிலையில், 4 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments