வீட்டை உடைத்துக் கொண்டு புகுந்த வாகனம், செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்கியவரால் விபத்து

0 2339

அமெரிக்காவில் செல்போன் பேசிக் கொண்டு அதிவேகமாகச் செலுத்தப்பட்ட கார், வீட்டுச் சுவரை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளானது. நியூ மெக்ஸிகோ மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் பேசியபடியே தனது காரை வேகமாகச் செலுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது, கட்டுப்பாட்டினை இழந்த கார் தாறுமாறாகச் சென்று சாலையோரம் இருந்து வீட்டுச் சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது. கார் விபத்து ஏற்படும் சில நொடிகளுக்கு முன்பாகவே வீட்டின் வெளியேயும், உள்ளேயும் படுத்திருந்த 4 நாய்கள் தப்பித்து ஓடியதால் உயிர் தப்பின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments