தாத்தா இறந்த சோகம் மறையும் முன், இறுதி ஊர்வலத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுமி

0 2810

விழுப்புரம் மாவட்டம் சித்திலிங்கமடத்தில் தாத்தா இறுதி ஊர்வலத்தில் சென்று கொண்டு இருந்த பேத்தி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த தாத்தா வெள்ளிக்கண்ணுவை அடக்கம் செய்ய உறவினர்களுடன் சென்ற 5 ஆம் வகுப்பு சிறுமி திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், 3 மணி நேரம் தேடி சிறுமியின் உடலை கண்டெடுத்தனர். 12 அடி ஆழ ஆற்றில் மண்ணில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments