ஸ்பெயினில் சட்டவிரோதமாக மக்களை டிரக்குகளில் ஏற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு கடத்த முயன்ற 15 பேரை கைது செய்த போலீசார்...

0 2082

ஸ்பெயினில் சட்டவிரோதமாக மக்களை டிரக்குகளில் ஏற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விட முயன்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் உள்பட ஒரு கூட்டத்தை டிரக்குகளில் ஏற்றி 26 ஐரோப்பிய நாடுகளை ஒன்றடக்கிய Schengen area பகுதியில் விட கடத்தல் கும்பல் முயன்றதாகவும், அந்த முயற்சி தடுக்கப்பட்டு ஏறத்தாழ 77 பேர் மீட்கப்பட்டதாகவும் ஸ்பெயின் சட்டவிரோத குடியேற்ற தடுப்பு போலீசார் தெரிவித்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட 12 ஸ்பெயின் நாட்டவர் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இதுவரை 400 பேரை பெரும் தொகை வாங்கிக் கொண்டு இதேபோல் நாடு கடத்தியது  கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments