நைஜீரியாவில் 21 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த விபத்து... பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு

0 1859

நைஜீரியாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 21 மாடி கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்து உள்ளது. லாகோஸ் நகரில் தனியார் நிறுவனம் கட்டி வந்த 21 மாடி குடியிருப்பு கட்டடம் கடந்த செவ்வாய்க்கிழமை சரிந்து விபத்துக்குள்ளானது.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் தற்போது வரை 3 பெண்கள் உள்பட 36 பேரின் உடல்களை கைப்பற்றி உள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது. விபத்தின் போது சம்பவ இடத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை தெரியாததால் பலி எண்ணிக்கை கூடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபகுதியில் கனமழையால் 2 சிறிய கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments