கொரோனாவின் புதிய பேரலை 53 நாடுகளில் வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...

0 3918

கொரோனாவின் புதிய பேரலை 53 நாடுகளில் வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த 5 வாரங்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் இது குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் புதிய வீரியத்துடன் கொரோனா வைரஸ் பரவலாம் என்றும் ஏற்கனவே பல நாடுகளுக்கு அது பரவிக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு முன்பு இருந்த அதே நிலைக்கு மீண்டும் போய்க் கொண்டிருக்கிறோம் என்று டென்மார்க்கில் உள்ள ஐரோப்பிய மருத்துவ வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments