புதுச்சேரியில் பாதுகாப்பின்றி எடுத்துச் செல்லப்பட்ட நாட்டு பட்டாசுகள் வெடித்ததில் 7 வயது மகன் மற்றும் தந்தை சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி...

0 5644

தமிழ்நாடு-புதுச்சேரி எல்லையில் இரு சக்கர  வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நாட்டு பட்டாசு வெடித்ததில்,தந்தை. மகன் உயிரிழந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. 

புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்த கலைநேசன் நாட்டுப் பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு பகுதியில் தாய் வீட்டில் இருக்கும் மனைவியை பார்ப்பதற்காக 7வயது மகனுடன் யமஹா ஃபேசினோவில் சென்றுள்ளார்.

அப்போது உறவினர்களுக்கு கொடுப்பதற்காக நாட்டு பட்டாசுகளை ஒரு சாக்கு பையில் போட்டு ஸ்கூட்டரின் முன்பு வைத்த கலைநேசன், அதன் மீது மகனை அமர வைத்து கூட்டிச் சென்றுள்ளார். கோட்டகுப்பம் பிரிவு சாலையில் சென்ற போது அவர்கள் சென்ற வாகனம் திடீரென வெடித்து சிதறியது.

வாகனத்தில் இருந்த நாட்டு பட்டாசுகள் உராய்வு காரணமாக வெடித்து சிதறியதாக சொல்லப்படுகிறது. இதில் ஸ்கூட்டரின் முன்னால் அமரிந்திருந்த சிறுவன் மற்றும் கலைவேந்தன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த சலாவுதீன், கணேசன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் இருமாநில எல்லைகளில் நடந்ததால் இருமாநில போலீசாரும் வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments