காவல்துறை ஆணையர் இரவு நேரத்தில் ரோந்து மேற்கொண்டு காவல்துறையினருக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்து

0 1989

டெல்லி காவல்துறை ஆணையர் ராகேஷ் ஆஸ்தானா இரவு நேரத்தில் ரோந்து மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தியா கேட், பிரகதி மைதான், ஹெக்சகன் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர் நேரில் சென்று காவல்துறையினரை உற்சாகப்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகேஷ் ஆஸ்தானா மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு உற்சாகம் அளிக்கவே தாம் இது போன்ற ரோந்துப் பணியை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments