தென்காசி பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு...

0 2019

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த பெரியாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய 60 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

விடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் கருப்பாநதி, பெரியாறு, சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு வருவதை அறியாமல் குளித்தும், விவசாயி பணிகளிலும் ஈடுபட்டவர்கள் வெள்ள நீரில் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், பெரியாற்று படுகையில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்டனர்.அதேபோல் திரிகூடபுரம் பெரியநாயகம் கோவில் பெரியாற்று படுகையில் சிக்கிக் கொண்ட 3 பெண்கள் உள்பட 20 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments