டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று - ஆஸ்திரேலியா அணி வெற்றி

0 3108
டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று - ஆஸ்திரேலியா அணி வெற்றி

டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

துபாயில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச வீரர்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

15வது ஓவரில், அனைத்து விக்கெட்களையும் இழந்த வங்கதேசம் 73 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

எளிய இலக்கை சேஸ் செய்த ஆஸ்திரேலியா, 7வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. கேப்டன் ஆரோன் பிஞ்ச்  20 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார்.

இந்த வெற்றியின் மூலம், குரூப் ஒன் பிரிவில் ஆஸ்திரேலியா 2வது இடத்துக்கு முன்னேறியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments