17 மயில்களை வேட்டையாடி கொன்ற இருவர் கைது

0 2717
17 மயில்களை வேட்டையாடி கொன்ற இருவர் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 17 மயில்களை வேட்டையாடி கொன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கீழச்சிவல்பட்டி, இளையாத்தங்குடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் மயில்கள் வேட்டையாடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் இருந்த சாக்குப் பைகளை சோதனை செய்ததில், அதில் 17 மயில்கள் இறகுகளை நீக்கியவாறு இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, பொன்னமராவதி பகுதியை சேர்ந்த ராஜா, தியாகராஜன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments