தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பை 33 விழுக்காடு அதிகரிக்க தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம் தொடக்கம்

0 1701
தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பை 33 விழுக்காடாக அதிகரிக்கவும், பருவநிலை மாற்றத்தைக் கண்காணித்துச் சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தவும் தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இப்போது 23 புள்ளி 7 விழுக்காடாக உள்ள காடுகள் பரப்பளவை அடுத்த பத்தாண்டுகளில் 33 விழுக்காடாக அதிகரிக்க மரங்களை நடும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் என்னும் அளவில் ஐந்தாண்டுகளுக்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்தப் பணிகளை மேற்கொள்ளத் தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம் தொடங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநரவையில் வனத்துறை, நிதித்துறை, மின்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, வேளாண்துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றின் செயலர்கள், முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் ஆகியோர் இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments