திரையரங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீர் தீ விபத்து ; போலீசார் விசாரணை

0 2981
திரையரங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீர் தீ விபத்து ; போலீசார் விசாரணை

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

ரோகிணி திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த நபர் ஒருவர், அங்கிருந்த பார்க்கிங்கில் அவரது டாடா இண்டிகா விஸ்டா காரை நிறுத்திவிட்டு படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது, திடீரென காரில் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது.

தகவலறிந்து வந்த கோயம்பேடு தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதமான நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments