இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டுப் படையினரும் இனிப்புகளைப் பரிமாறி தீபாவளி கொண்டாட்டம்

0 2897
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளித் திருநாளையொட்டி இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டுப் படையினரும் இனிப்புகளைப் பரிமாறி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டில் தித்வால் என்னுமிடத்தில் பாலத்தைக் கடந்து சென்ற இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் படையினருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இதேபோல் பஞ்சாபின் அட்டாரி - வாகா எல்லையிலும், ராஜஸ்தானின் பார்மரிலும், குஜராத்திலும் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments