வெளவால் கூட்டத்திற்காக 25 ஆண்டுகளாக பட்டாசற்ற தீபாவளியை கடைப்பிடிக்கும் கிராம மக்கள்

0 2109
வெளவால் கூட்டத்திற்காக பட்டாசை புறக்கணிக்கும் கிராமம்

கரூர் அருகே அமைந்துள்ள ஒரு கிராமம் வெளவால் கூட்டத்திற்காக பட்டாசு வெடிப்பதை முற்றாக புறக்கணித்துள்ளது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் ஊராட்சிக்குட்பட்ட தொட்டியபட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இக்கிராமத்தின் ஒதுக்குபுறமாக உள்ள அய்யனார் கோவிலின் ஆலமரத்தில் வாழ்ந்து வரும் சுமார் 3000க்கும் மேற்பட்ட பழந்தின்னி வெளவால்கள், இருட்டியபின் உணவுதேடலுக்கு கொல்லிமலைக்கு படையெடுத்து விடிவதற்கு முன்பாக மீண்டும் ஆலமரத்தை வந்தடைகின்றன.

இந்த வெளவால்களை பொக்கிஷமாக பாவிக்கும் கிராம மக்கள், கடந்த 25 ஆண்டுகளாக எந்த நிகழ்வுகளிலும் பட்டாசை அனுமதிப்பதில்லை. கிராம பெரியோர்களின் இம்முடிவிற்கு இளைஞர்களும் பக்கபலமாக இருக்கின்றனர்

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments