விடிய விடிய மது அருந்திய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு

0 4273
விடிய விடிய மது அருந்திய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் விடிய விடிய மது அருந்திய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருந்ததியர் வீதியைச் சேர்ந்த பெயிண்டர்களான சக்திவேல், பார்த்திபன் மற்றும் அவரது நண்பரான முருகானந்தம் ஆகியோர் தீபாவளியை கொண்டாட நேற்றிரவு விடிய விடிய மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து மீண்டும் இன்று காலை மூவரும் கள்ளச் சந்தையில் மது வாங்கி பட்டத்தரசிய்யம்மன் கோவில் எதிரே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. அப்போது 3 பேரும் மயங்கிய நிலையில் முருகானந்தம், சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பார்த்தீபனும் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து வந்து 3 உடல்களையும் கைப்பற்றிய போலீசார், அங்கிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments