ரஷ்யாவில் விழுந்து நொறுங்கிய பெலாரஸ் நாட்டு சரக்கு விமானம், 9 பேர் பலி.!

0 1992

பெலாரஸ் நாட்டு சரக்கு விமானம் ரஷ்யாவில் விழுந்து நொறுங்கியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்யாவின் சுகோட்கா மாகாணத்தில் இருந்து பெலாரஸ் நோக்கி திரும்பி கொண்டிருந்த ஆண்டனவ் A.N 12 ரக விமானம்,  திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

வானில் வட்டமடித்தபின், இர்குட்ஸ்க் நகரில் விழுந்து நொறுங்கிய விமானம் கொளுந்து விட்டு எரிந்தது.

கொட்டும் பனிமழையை பொருட்படுத்தாத தீயணைப்பு வீரர்கள் போராடி நெருப்பை அனைத்தனர். விமானத்தில் பயணித்த 9 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1970-களில் வடிவமைக்கப்பட்ட ஆண்டனவ் விமானங்கள் இன்னும் பயன்படுத்தப்படுவதால் அடிக்கடி விபத்துக்குள்ளாவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments