நாடு முழுவதும் தீபாவளித் திருநாளைப் பொதுமக்கள் புத்தாடை அணிந்தும், இனிப்பு வழங்கியும் ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்தும் கொண்டாட்டம்!

0 2227

நாடு முழுவதும் தீபாவளித் திருநாளைப் பொதுமக்கள் புத்தாடை அணிந்தும், இனிப்பு வழங்கியும் ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்தும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தியும் வருகின்றனர்.

கோவாவின் பனாஜியில் மிகப்பெரிய நரகாசுரன் உருவப்பொம்மையை வெடிவைத்தும் தீவைத்தும் கொளுத்தி எரித்துப் பொதுமக்கள் கொண்டாடினர்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீபாவளியையொட்டி அயோத்தியில் உள்ள ராம் லல்லாவில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் தீபாவளியையொட்டிப் பொதுமக்கள் பத்மநாப சுவாமி கோவிலுக்குக் குடும்பத்துடன் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

மேற்கு வங்கத்தில் கொல்கத்தா தட்சிணேஸ்வரத்தில் உள்ள காளி கோவிலில் பக்தர்கள் வழிபட்டனர்.

ஐதராபாத் பாக்கியலட்சுமி கோவிலில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து வழிபட்டுச் சென்றனர்.

உத்தரக்கண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள கோவிலுக்கும் தீபாவளியையொட்டிப் பக்தர்கள் சென்று வழிபட்டு வந்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments