நரிக்குறவர் - இருளர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0 2583

மாமல்லபுரம் அருகே, நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மக்களின் குடியிருப்புகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே, பூஞ்சேரி கிராமத்தில் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு பட்டாக்கள், குடும்ப அட்டைகள்,  வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவி, கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவு ஒப்புதல், அங்கன்வாடி மற்றும் வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணை மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணை, ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

282 பயனாளிகளுக்கு 4 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments