அர்ஜென்டினாவில் கட்டுப்பாட்டினை இழந்த சிறிய ரக விமானம் கிராமத்தின் நடுவே தெருவில் விழுந்து நொறுங்கியது!

0 3022

அர்ஜென்டினாவில் பயிற்சி விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் தாய், மகள் உள்பட ஐவர் காயமடைந்தனர். அந்நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ஜெனரல் பெல்கிரானோ என்ற மலைகிராமத்தில் இரு சிறிய ரக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.

அப்போது கட்டுப்பாட்டினை இழந்த விமானம் ஒன்று கிராமத்தின் நடுவே அமைந்துள்ள தெருவில் விழுந்து நொறுங்கியது.இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி அதனைப் படம் பிடித்துக் கொண்டிருந்த தாய், மகள் மற்றும் இரு பாதசாரிகள் காயமடைந்தனர். விமானி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments