கேரளாவில் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்களும் திரையரங்கத்திற்குள் அனுமதி - முதலமைச்சர் பினராயி விஜயன்...

0 2018

கேரளாவில் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

அவரது தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், திரையரங்குகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு சுகாதாரத்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதாகவும், திறந்த முதல் நாளிலேயே 80 சதவீத வருகை பதிவாகியுள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments