வரிக் குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

0 4444

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரிக் குறைப்பு நாடு முழுவதும் இன்று நடைமுறைக்கு வந்துள்ளதால் அவற்றின் விலை குறைந்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக் கூட்டுவரியும் குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

மத்திய அரசு பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்துக் கொண்டுள்ளது.

இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் 36 காசுகள் குறைந்து 101 ரூபாய் 40 காசுகளாக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 11 ரூபாய் 26 காசுகள் குறைந்து 91 ரூபாய் 43 காசுகளாக உள்ளது.

பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதை ஏற்று உத்தரப்பிரதேசம், குஜராத், அசாம், கர்நாடகம், கோவா, பீகார், உத்தரக்கண்ட், மணிப்பூர், திரிபுரா, அரியானா, புதுச்சேரி ஆகிய 11 மாநிலங்களில் மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளது.

அரியானாவில் வரிக்குறைப்புக்குப் பின் பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டின் விலையும் லிட்டருக்கு 12 ரூபாய் குறைந்துள்ளது. புதுச்சேரியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 85 காசுகள் குறைந்து 94 ரூபாய் 94 காசுகளாக உள்ளது.

டீசல் விலை லிட்டருக்கு 19 ரூபாய் குறைந்து 83 ரூபாய் 58 காசுகளாக உள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் ஒரேநாளில் வரியைக் குறைத்துள்ளதால் புதுச்சேரி மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments