தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 3.54 லட்சம் பயணிகள் சொந்த ஊர் பயணம்

0 3317

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இதுவரை சென்னையிலிருந்து 8,478 பேருந்துகள் மூலம்  மூன்றரை லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, 4 பேருந்து நிலையத்திற்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 270 இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்ததாக 7 பேருந்துகள் மீது போக்குவரத்து துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments