விஜய்சேதுபதி மீது தாக்குதல் நடத்த இது தான் காரணமாம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

0 63832
விஜய்சேதுபதி மீது தாக்குதல் நடத்த இது தான் காரணமாம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகர் விஜய் சேதுபதி மீது பெங்களூரு விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ள நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் விஜய்சேதுபதி சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த சமையல் நிகழ்ச்சியின் படப்பிடிப்பிற்காக செவ்வாய்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்றார். விமான நிலையத்தில் இறங்கிய விஜய் சேதுபதியை, நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுடன் ரசிகர்களும் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அப்போது ரசிகர்கள் பயணிகள் சிலரை தள்ளிவிட்டதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு விஜய் சேதுபதியை தொழிற்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக வெளியே அழைத்துச்சென்றனர்.

ரசிகர்களால் பாதிப்புக்குள்ளான இளைஞர் ஒருவர் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்தவாரே பின் தொடர்ந்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பின் பக்கமாக ஓடிச்சென்று விஜய் சேதுபதியின் மீது ஏறி மிதித்தார். இதில் நிலைதடுமாறிய விஜய் சேதுபதியை பாதுகாவலர்கள் பிடித்துக் கொண்டனர்.

இதையடுத்து ரசிகர்கள் தாக்குதல் நடத்திய நபரை சுற்றிவளைத்து தாக்கினர். பாதுகாப்பு படையினர் அந்த நபரை பிடித்து பெங்களூரு விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் தாக்குதலுக்கு இரு வேறு காரணங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக இருந்த விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் அவர் அந்த படத்தில் இருந்து விலகினார். அதன் தொடர்ச்சியாக அவர் தயாரித்த துக்ளக் தர்பார் என்ற படத்தில் தனக்கு எதிர்ப்பு தெரிவித்த குறிப்பிட்ட கட்சியினரை விமர்சிக்கும் விதமாக காட்சிகள் வைத்ததாக கூறப்படுகின்றது. இதற்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

இந்த காரணத்துடன், விமான நிலையத்தில் ரசிகர்களுடனான தள்ளு முள்ளு சம்பவமும் சேர்ந்து கொண்டதால் அந்த இளைஞர் விஜய் சேதுபதி மீது ஆத்திரம் கொண்டு ஏறி மிதித்ததாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய இளைஞரோ, விஜய்சேதுபதி தூண்டுதலின் பேரில் விமான நிலையத்தில் வைத்து ரசிகர்கள் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் அளித்துள்ளார்.

இதனால் இரு தரப்பு புகார்களையும் பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து விஜய் சேதுபதி தரப்பில் கேட்ட போது தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments