தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது மத்திய அரசு

0 11336
தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது மத்திய அரசு

தீபாவளி முதல் பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

டீசல் மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரியை குறைப்பதன் மூலம் இந்த விலை குறைப்பு அமலுக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பை அடுத்து சென்னையில் லிட்டருக்கு 106 ரூபாய் 66 காசுகளாக விற்கும் பெட்ரோல் 101 ரூபாய் 66 காசுகளுக்கு விற்கப்படும். அதே போன்று லிட்டருக்கு 102 ரூபாய் 52 காசுகளாக இருக்கும் டீசல் விலையில் 10 ரூபாய் குறைக்கப்படுவதால், 92 ரூபாய் 59 காசுகளாக அதன் விலை இருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments