கோவேக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு WHO-ன் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அனுமதி

0 2362

இந்திய தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசிக்கு,  உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனை குழு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கி உள்ளது.

இந்த அனுமதியை பெற, கோவேக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம் தாக்கல் செய்த கிளினிகல் சோதனை முடிவுகளை உலக சுகாதார நிறுவனம் பரிசீலித்து வந்தது.

இந்த நிலையில் அவசரகால அனுமதியை பெற வேண்டுமானால் கூடுதல் தரவுகளை அளிக்க வேண்டும் என கடந்த 26 ஆம் தேதி அதன் தொழில்நுட்ப ஆலோசனை குழு அறிவுறுத்தியது.

அதன் அடிப்படையில் கூடுதல் தரவுகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றையும் பரிசீலித்த பின்னர் கோவேக்சினுக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிளினிகல் சோதனை முடிவுகளில் கோவேக்சின் தடுப்பூசி,அறிகுறிகளுடன் கூடிய கொரோனாவுக்கு எதிராக 77 புள்ளி 8 சதவிகித பாதுகாப்பையும், புதிய டெல்டா மரபணு மாற்ற வைரசுக்கு எதிராக 65 புள்ளி 2 சதவிகித பாதுகாப்பை அளிப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments