தொழிலதிபரைக் கடத்தி மிரட்டி சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கில், காவல்துறை அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் மறுப்பு

0 2050

சென்னையில் தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்கிய வழக்கில் சிக்கிய காவல்துறை அதிகாரிகளுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்ட உயர்நீதிமன்றம், காசு கொடுத்து சொத்து வாங்கியவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷை கடத்திச் சென்று மிரட்டி, அவரது சொத்துக்களை எழுதி வாங்கியதாக புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருமங்கலம் சரக உதவி ஆணையர் சிவக்குமார் உட்பட காவல் துறை அதிகாரிகள் 6 பேரும் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், காசு கொடுத்து சொத்து வாங்கியவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பது தான் நீதிமன்றத்தின் எண்ணம் என கருத்து கூறியது. இதனையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments