சுற்றுலா சென்ற சிறுமி மாயம் ; 18 நாட்களுக்கு பின் பத்திரமாக மீட்பு

0 2498
சுற்றுலா சென்ற சிறுமி மாயம் ; 18 நாட்களுக்கு பின் பத்திரமாக மீட்பு

ஆஸ்திரேலியாவில் கடந்த 18 நாட்களாகத் தேடப்பட்டு வந்த நான்கு வயது சிறுமி, பூட்டிய வீடு ஒன்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார்.

கடந்த மாதம் 16ம் தேதி, 4 வயது சிறுமியான கிளியோ குடும்பத்தினருடன் கர்னர்வோன் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இரவில் பெற்றோருடன் கூடாரத்தில் உறங்கிய கிளியோ மறுநாள் காலை மாயமானார்.

வான்வழி, நிலவழி மற்றும் கடல் வழியாக கிளியோவைத் தேடும் பணிகளில் போலீசாரும், நூற்றுக்கணக்கான அதிகாரிகளும் ஈடுபட்டனர். சிறுமி மாயமான சம்பவம் நாடு முழுதும் பேசு பொருளானது.

சிறுமி குறித்து துப்பு தருபவர்களுக்கு ஐந்தரை கோடி ரூபாய் பரிசுத்தொகையை போலீசார் அறிவித்தனர். இந்நிலையில், ரகசியத் தகவலின் அடிப்படையில், சிறுமி காணாமல் போன இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் அப்பால் உள்ள வீட்டின் கதவை உடைத்து சோதனையிட்ட போலீசார் சிறுமியை பத்திரமாக மீட்டனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments