திருவாரூர், மன்னார்குடி வட்டாரத்தில் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் சேதம்

0 1748

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாரத்தில் பெய்த கனமழையால் ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடவு செய்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அரிச்சபுரம், தேவங்குடி, கீழாளவந்தசேரி உள்ளிட்ட ஊர்களில், நடப்பட்டு 15 நாட்கள் ஆன சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

நீர் வடியாமல் தொடர்ந்து தேங்கி நின்றால் பயிர்கள் அழுகும் நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments