மருத்துவமனைகள் தீவிரவாதிகளின் இலக்காகக் கூடாது - ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.நா. சபை கண்டனம்

0 1602

ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபை, மருத்துவமனைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடாது என தெரிவித்தது.

செவ்வாய்கிழமையன்று காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 25 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹாக், 400 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மீது மனித வெடிகுண்டாக சென்ற நபர், ஆயுதமேந்தியவர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.

இந்நிலையில், ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள், வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மருத்துவமனைக்கு வெளியே வெடிக்கச்செய்ததில் பலர் உயிரிழ்ந்ததாக தாலிபான்கள் குறிப்பிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments