முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளத்தின் இடுக்கி அணைக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

0 1754
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளத்தின் இடுக்கி அணைக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளத்தின் இடுக்கி அணைக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு மூவாயிரத்து 984 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே முல்லைப் பெரியாறு அணையின் ஆறு மதகுகளைத் திறந்து இரண்டாயிரத்து 974 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்போது மேலும் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 8 மதகுகள் வழியாக மூவாயிரத்து 984 கன அடி நீர் வெளியேறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் என்பதால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments