இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு ; பிரதமர் நரேந்திர மோடி

0 2285
இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு ; பிரதமர் நரேந்திர மோடி

அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை வீடு வீடாகச் சென்று எடுத்துரைத்து அவர்களைத் தடுப்பூசி மையங்களுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐம்பது விழுக்காட்டுக்கும் குறைவாக முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நாற்பதுக்கு மேற்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலியில் கலந்துரையாடினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பிரதமருடனான காணொலி கலந்துரையாடலில் பங்கேற்றார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, நூறு கோடி டோஸ் தடுப்பூசி போட்டபின் நாம் தளர்ந்துபோனால் புதிய சிக்கல் எழலாம் எனக் குறிப்பிட்டார்.
நோயையும் எதிரிகளையும் எப்போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும், ஒழிக்கும் வரை போராட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்தவும், அதிக எண்ணிக்கையிலானோருக்குத் தடுப்பூசி போடவும் புதிய முறைகளைக் கையாள வேண்டும் என வலியுறுத்தினார். நூறு விழுக்காடு முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ள மாநிலங்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார்.

தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் வதந்தியும், தவறான கருத்துக்களும் மிகப்பெரிய சவால்கள் எனக் குறிப்பிட்ட அவர், விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதற்கான தீர்வாகும் எனத் தெரிவித்தார்.

அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை வீடுவீடாகச் சென்று எடுத்துரைத்து அவர்களைத் தடுப்பூசி மையங்களுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments