ஸ்ரீநகரில் இருந்து ஷார்ஜாவுக்கான விமானங்கள், தமது வான் எல்லையில் பறக்க பாகிஸ்தான் தடை

0 2361

ஸ்ரீநகரில் இருந்து ஷார்ஜாவுக்கான விமானங்கள், தமது வான் எல்லையில் பறக்கக்கூடாது என்ற தடையை ஏற்படுத்தி, பாகிஸ்தான் சர்வதேச விமானப் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளது.

இதன் காரணமாக இந்த தடத்திலான விமானங்கள் உதய்பூர் மற்றும் அகமதாபாதை சுற்றிக் கொண்டு ஓமன் வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பயணதூரம் அதிகரித்துள்ளதுடன், பயணக்கட்டணமும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் காஷ்மீரில் இருந்து மேற்காசிய நாடுகளுக்கு சரக்குகளை கொண்டு செல்வதிலும் கூடுதல் செலவினம் ஏற்படும் என ஸ்ரீநகரில் உள்ள வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் இந்த விஷமத்தனமான நடவடிக்கை குறித்து விமானப்போக்குவரத்து அமைச்சகம், வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த செயல் குறித்து சர்வதேச விமானப்போக்குவரத்து அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments