தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்

0 2138
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரனமாக, தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரனமாக, தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்வதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மற்றும் கடலூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதை குறிக்க ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளைய தினமும் டெல்டா உட்பட 11 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும், சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கேரள கடலோரம், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 3 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments