கொலம்பியாவில் தொடர் கனமழையால் நிலச்சரிவு - 12 பேர் பலி..

0 1390
கொலம்பியாவில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

கொலம்பியாவில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மல்லாமாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்ததால் 12 பேர் பலியாகினர்.

மேலும், 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டதை அடுத்து, நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொலம்பியாவில் மலைகள் சூழ்ந்த மல்லாமா உள்ளிட்ட பகுதிகளில், காடுகளை அழித்து ஆபத்தான முறையில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments