பசும்பொன் விழாவின்போது விதிகளை மீறியதாக 956 பேர் மீது வழக்குப்பதிவு.. 5 பேர் கைது

0 2590
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் விழாவின்போது விதிகளை மீறியதாக 956 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 5 பேரை கைது செய்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் விழாவின்போது விதிகளை மீறியதாக 956 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 5 பேரை கைது செய்துள்ளனர்.

அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு, நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.

இருப்பினும் நிகழ்ச்சிக்கு வந்த சிலர் வருவாய்த்துறை, காவல்துறை வாகனங்கள் மீது ஏறி நின்று ஆட்டம் போடுவது, விதிகளை மீறுவது என அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகின. 

இதுதொடர்பாக, 956 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்து ஏற்படுத்தும்படி இயக்கப்பட்ட 58 இருசக்கர வாகனங்கள், 39 நான்கு சக்கர வாகனங்களை அடையாளம் கண்டு, இதுவரை 16 வாகனங்களைப் பறிமுதல் செய்து 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments