இரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் இடுப்பளவு மழை நீரில் பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் நிலை..

0 1810
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் நடந்து செல்லும் நிலை உள்ளது.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் நடந்து செல்லும் நிலை உள்ளது.

ஆழ்வார்குறிச்சி செல்லும் வழியில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில்வே சுரங்கப்பாதை வழியாகத்தான் செங்கானூர் மக்கள் வெளியூர்களுக்குச் சென்று வருகின்றனர்.

மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் தேங்கும் நீரை வெளியேற்ற நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்ததாகக் கூறும் செங்கானூர் மக்கள், ரயில்வே நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே பெய்து வரும் தொடர் கனமழையால் சுரங்கப்பாதைக்குள் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments