’தீபாவளித் திருநாள்’ அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!

0 1710

தீபாவளித் திருநாளையொட்டித் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 

ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள செய்தியில், தீபாவளித் திருநாள் என்பது அறியாமை என்னும் இருளகற்றி அறிவொளி ஏற்றுவதைக் குறிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நாளில் அமைதி, நல்லிணக்கம், வளம், மகிழ்ச்சி ஆகியன உண்டாகட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள செய்தியில், தீப வெளிச்சத்தில் தெய்வத்தைக் காண்பதும் கண்டு தொழுவதும் தொன்றுதொட்டு வருகின்ற மரபு எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கும் தீபாவளித் திருநாளில் மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அநீதி இருள் விலகிச் சமூகநீதி வெளிச்சம் பரவத் தீபஒளித் திருநாள் வகை செய்யட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டில் அதர்மம் அழிந்து தர்மம் நிலைக்க இந்தத் தீபாவளித் திருநாள் பாதை அமைத்துக் கொடுக்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments