அயோத்தியில் தீபத்திருவிழாவையொட்டி 9 இலட்சம் தீபங்கள் ஏற்றப்பட உள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

0 1501

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் தீபத்திருவிழாவையொட்டி ராமாயணத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளைக் காட்டும் வகையில் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், நாட்டுப்புறக் கலைஞர்களின் நடனங்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் விழாவில் ராமாயணக் காட்சிகளை விளக்கும் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வண்ணக் கோலங்களும் வரையப்பட்டுள்ளன. விழாவையொட்டி நாட்டுப்புறக் கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விடுத்துள்ள செய்தியில், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் 9 இலட்சம் வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளதைக் காட்டும் வகையில் அயோத்தி தீபத்திருவிழாவில் 9 இலட்சம் விளக்குகள் ஏற்றப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் குறைந்தது ஒரு வீட்டையாவது தத்தெடுத்துத் தீபங்களை ஏற்றி இனிப்பு வழங்குவதுடன், குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments