சித்திரை ஆட்டத்திருநாள் வழிபாட்டுக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு

0 1446

கேரளத்தின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை ஆட்டத் திருநாளையொட்டி நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

திருவாங்கூர் மன்னர் பாலராம வர்மன் பிறந்த நாளான ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திரத்தையொட்டிக் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட, கொரோனா இல்லை எனச் சான்றிதழ் பெற்ற பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இன்று வழிபாட்டுக்குப் பின் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் கார்த்திகை மாதம் மண்டலப் பூசைக்காகத் திறக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments