பாலாற்றில் வெள்ளப்பெருக்கு.. ஆஞ்சநேயர் கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்.. கோவிலுக்குள் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்ட தீயணைப்புத்துறையினர்..

0 1730
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலுக்குள் சிக்கித் தவித்த இருவர், தீயணைப்புத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தொடர் கனமழையால் ஆழியாறு, பாலாறு ஆற்றுப்படுகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் பாலாற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

வழியில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால், கோயிலில் இருந்து வெளியேற முடியாமல் இரவுக் காவலர்களான மகாலிங்கம், திருமலைசாமி ஆகிய இருவர் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், நீண்ட நேரம் போராடி, கயிறு கட்டி இருவரையும் பத்திரமாக மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments